டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல: தென்னாப்பிரிக்க அணியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 10ம் தேதி தொடங்கிய இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 94 (72 &22) ரன்கள் குவித்ததோடு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர் கேஷவ் மகராஜ் மற்றும் 1 விக்கெட் வீழ்த்திய சீனூரான் முத்துசாமி. இந்த டெஸ்ட்டில் கேசவ் மகராஜ் விளாசிய 94 ரன்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மயங்க் அகர்வால் சதம்(108), விராட் கோலியின்(254) இரட்டை சதம் ஆகியவற்றால் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி. 4-வது நாளில் தென்னாப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, இந்திய அணி வீரர்களின் ஸ்விங் பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 

எல்கர், மார்க்ரம் ஆட்டதைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவரில் மார்க்ரம் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து புருய்ன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் வீசிய 6-வது ஓவரில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார், சஹா இடது புறம் பறந்து அற்புதமாகக் கேட்ச் எடுத்தார்.

அடுத்து வந்த கேப்டன் டூப்பிளஸியும் நிலைக்கவில்லை. எல்கருக்கு துணையாக ஆடிய டூப்பிளஸி 50 பந்துகளைச் சந்தித்த போதிலும், 5 ரன்கள் மட்டுமே சேர்த்து அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். மதிய உணவு இடைவேளையின் போது தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்திருந்தது.

ஓரளவுக்கு நிலைத்து ஆடிய எல்கர் 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவுமா 38 ரன்னிலும், டீ காக் 5 ரன்னிலும் முத்துசாமி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸைப் போன்றே பிலாண்டரும், கேசவ் மகராஜும் இணைந்து இந்தியப் பந்துவீச்சை சோதித்தனர். இருவரையும் பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். இருவரும் 55 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிலாண்டர் 37 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாஹாவிடம் விக்கெட்டை இழந்தார். பிலாண்டர் 2 சிக்சர்களை துணிச்சலாக விளாசினார்.

அடுத்து வந்த ரபாடா 4 ரன்கள் சேர்த்து உமேஷ்யாதப் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசிவரை போராடிய கேசவ் மகராஜ் 22 ரன்கள் சேர்த்தபோது ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

67.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஷமி, இசாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அஸ்வின், ஜடேஜா,உமேஷ் யாதவ் ஆகியோரின் நெருக்கடியான பந்துவீச்சால், புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியஅணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

not only in test match india play bold in south africa also


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->