நேற்றைய போட்டியில், வெற்றி தோல்வியை கடந்து மனதை நெகிழ வைத்த அந்த தருணம்!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில், காலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். நீயூசிலாந்து அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில், முன்றோ டக் அவுட்டாகி வெளியேறினார்கள். 

அதன்பிறகு களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் சரிவை சரி செய்ததுடன் நல்ல நிலைக்கும் கொண்டு சென்றது. ரோஸ் டெய்லர் அரை சதமடித்து அசத்தினார். இந்த ஜோடி160 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், டெய்லரை பகுதி நேர பந்துவீச்சாளர் கெயில் அவுட்டாக்கினார். டெய்லர் 69 ரன்னில் வெளியேறினார். 

அதன்பிறகு வந்த யாருமே நிலைத்து நிற்கவில்லை என்றாலும் ஒருபுறம்  நிலைத்து நின்ற கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் வந்த காட்ரெல் அவரை வெளியேற்றினார்.  நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், பிராத்வெயிட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  

வெஸ்ட் இண்டீஸ் அணி  292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியின்  போது தொடக்க ஆட்டக்காரரான ஏவின் லெவிஸ் காயமடைந்ததால், தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் ஹோப் களம் இறங்கினர். 

ஆனால் இந்த ஜோடி அணிக்கு பலனளிக்கவில்லை. ஷாய் ஹோப் 1(3) ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய நிகோலஸ் பூரன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து, கிறிஸ் கெய்லுடன் ஹெட்மேயர் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்க்க தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை கடந்த நிலையில் ஹெட்மயர் 54 (45) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்ற அதிரடி வீரர் கிறிஸ் கெல் 84 பந்துகளை சந்தித்து 87 ரன்கள் எடுத்திருந்த போது கிரான்ட்ஹோம் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்லே நர்ஸ் 1(8) ரன்னும், இவின் லீவீஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அடுத்து களம் இறங்கிய  பிராத்வெய்ட்டுடன், கேமர் ரோச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரளவு ரன் சேர்த்திருந்தநிலையில் கேமர் ரோச் 14(31) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு மரண பயத்தை அணிக்கான பொறுப்பான ஆட்டத்தை பிராத்வெய்ட் அளித்தார்.  தனது அரைசதத்தை பதிவு செய்த அவர், இறுதிவரை அதிரடியாக விளையாட வெற்றி பெரும் நிலையில் இருந்த போது ஆட்டமிழந்தார். தனி ஒருவனாக போராடிய பிராத்வெய்ட் தனது சதத்தை பதிவு செய்த நிலையில்101(82) ரன்களில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டிஸ் அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 ரன்களில் தோல்வியை தழுவியது. 

நியூசிலாந்து  அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், நீஷம், ஹென்றி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இந்த ஆட்டத்தில் தனி ஒருவனாக அதுவும் இறுதி விக்கெட்டுக்கு எதிர்  முனை ஆட்டக்காரரை பேட் செய்ய வாய்ப்பளிக்காமல் விக்கெட்டை காத்து பிராத்வெய்ட் எதிரணிக்கு பீதியை உண்டாக்கி கொண்டிருந்தார். ஒரே ஓவரில் 25 ரன்கள் எல்லாம் பறக்க, மைதானமே உற்சாகத்தில் மிதந்தது. இறுதியில் அவர் அவுட்டான போது, அதிர்ச்சியில் உறைய நியூசிலாந்து வீரர்கள் தங்கள் வெற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை விட, போராடி வீழ்ந்த பிராத்வெய்ட் க்கு ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. 

இந்தியா ஆப்கனிஸ்தான், போட்டியை விட இந்த போட்டி அதிக விறுவிறுப்புடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NewZealand Players Console to Carlos Brathwaite


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->