கண்ணிமைக்கும் நொடியில், நியூசிலாந்தை கதிகலங்க வைத்து மாஸ் காட்டிய தோனி! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதலில் மெதுவாக ஆட்டத்தை தொடங்கியவர்கள் பின்னர் சீரான வேகத்தில் அடித்து ஆட ஆரம்பித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் இந்திய முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் என்ற நிலை வந்தபோது ஷிகர் தவான் 66 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  சற்று நேர இடைவெளியில் ரோஹித் சர்மாவும் சதத்தை தவறவிட்ட நிலையில்  87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோஹித் சர்மா 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசினார். 

பின்னர் களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி நிலையில் தூக்கி அடித்த விராட் கோலி மீண்டும் ஏமாற்றமாக அரைசதம் கூட அடிக்காமல் 43 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டியில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுநேரத்தில் அப்படி ராயுடுவும் 47 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

தோனி  நிதானமாக விளையாட கடைசி ஓவரில் ஜாதவ் அட்டகாசமான பவுண்டரி சிக்ஸர்களை விளாசினார் 48 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்துள்ளது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினார். அதே சமயம் அவர்களது விக்கெட்டுகள் மளமளவென சரிய துவங்கியது. அந்த அணியின் பிரேஸ்வெல் மட்டும் 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இன்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லரை கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டெம்பிங் செய்து நியூசிலாந்து வீரர்களை கதிகலங்க வைத்தார் தோனி. 

வெறும் 0.08 நொடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை நிகைத்தியுள்ளார். இவர் ரன் ஓடுவதில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங் செய்வதிலும் அதிவேகத்தில் செயல்படுவது இந்திய அணிக்கு மிகுந்த பலத்தை கொடுத்து வருகின்றது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand vs india in dhoni stumping


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->