நியூசிலாந்தை மிரட்டிய இந்தியா! சிக்கனமாக கஞ்சத்தனம் காட்டிய ஜடேஜா! பும்ரா, ஷமி அபார பந்துவீச்சு! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆனது இன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து கிரீன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்  முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார் 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கடந்தபோட்டி போலவே இந்தப் போட்டியிலும் மார்டின் குப்டில் காலின் முன்றோ ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இருப்பினும் கடந்த போட்டி போல அதிரடியாக விளையாட முடியாமல் ரன் குவிக்க தடுமாறி இந்திய அணிக்கு 133 என்ற எளிமையான இலக்கிய நிர்ணயிக்கப்பட்டது. 

அதற்கு அடுத்து வந்த கேப்டன் கனே வில்லியம்சன் கடந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்த நிலையில், இந்த போட்டியில் ரன் குவிக்க மிகவும் தடுமாறினார். மறுமுனையில் ஒருநாள் போட்டிகளை போல மிகவும் நிதானமாக விளையாடி வந்த காலின் முன்றோ  25 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26 ரன்கள் மட்டுமே எடுத்து, சிவம் துபே பந்துவீச்சில் கேப்டன் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து கடந்த போட்டியில் டக் அவுட் ஆன காலின் டி கிராந்தோம், கடந்த போட்டியில் ஜடேஜாவின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது, போலவே இந்த போட்டியிலும் ஜடேஜாவின் முதல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோஸ் டைலர் இந்த போட்டியில் 24 பந்துகளில் ஒரு பவுண்டரி சிக்ஸர்களையும் அடிக்காமல் வெறும் 18 ரன்களை மட்டுமே அடித்து பும்ராவின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற விக்கெட் கீப்பர் சீபெர்ட் 26 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33௩ ரன்களை அடித்து நியூசிலாந்து அணிக்கு கௌரவமான இலக்கை அடைய உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே மிக சிறப்பாக பந்து வீசினார்கள். ஜஸ்பிரித் பும்ரா, தாக்கூர் , சிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தவிர்த்து மற்ற அனைவரும்  மிக சிறப்பாக பந்துவீசினார்கள்.

ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களை வீசி ௨22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களை வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவும் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய அணிக்கு 133 என்ற எளிமையான இலக்கிய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand scored only 132 in Auckland 2nd T20I


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->