20  ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உலக சாதனை படைத்த புதிய வீரர்! வியப்பில் கிரிக்கெட் உலகம்!  - Seithipunal
Seithipunal


20  ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உலக சாதனை படைத்த புதிய வீரர்! வியப்பில் கிரிக்கெட் உலகம்! 

இங்கிலாந்து நாட்டில் தற்போது உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் லீசெஸ்டர்ஷைர் மற்றும் வார்விக்ஷயர் அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் இதுவரை 20 ஓவர் போட்டிகளில் நடைபெறாத உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

லீசெஸ்டர்ஷைர் அணிக்காக ஆடிய காலின் அக்கர்மன்  என்ற பகுதி நேர பந்துவீச்சாளர் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது உடன் இல்லாமல், அவர் 20  ஓவர் போட்டிகளில் இதுவரை நடத்திராத உலக சாதனையையும் படைத்துள்ளார். அவர் 4  ஓவர்கள் பந்துவீசி 18  ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். 20  ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்டை கைப்பற்றும் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை காலின் அக்கர்மன் பெற்றுள்ளார். 

இதற்கு முன்பாக சோமர்செட் அணிக்காக ஆடியுள்ள அருள் சுப்பையா 5 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே 20  ஓவர் போட்டியில் மிகச் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. தற்போது அந்த சாதனையை காலின் அக்கர்மன் முறியடித்துள்ளார். இதில் அவர் பகுதி நேர பந்துவீச்சாளர் என்பது தான் வியப்பான விஷயம் ஆகும் .  

வார்விக்ஷயர் அணியின் ரன் குவிப்பை தடுக்கும் விதமாக,  பந்துவீச அழைக்கப்பட்டார் அக்கர்மான். ஆனால் அவருடைய பந்துவீச்சு அசத்தலாக போக, லீசெஸ்டர்ஷைர் அணிக்கு 55  ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

முதலில் ஆடிய லீசெஸ்டர்ஷைர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189  ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய வார்விக்ஷயர் அணியும் 13 ஓவர்களில் 2  விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114  ரன்கள் எடுத்து வலுவான நிலையிலேயே இருந்தது. ஆனால் அதன்பிறகு பந்து வீச அந்த காலின் அக்கர்மான் அந்த அணியின் 7  விக்கெட்டுகளை அடுத்தடுத்து காலி செய்ய, வார்விக்ஷயர் அணி 55  ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது. 

காலின் அக்கர்மான் பற்றி வேறு ஒரு சிறப்பான செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அவர் U19 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு துணை கேப்டனாக விளையாடியுள்ளார். தற்பொழுது அவர் நெதர்லாந்து அணிக்காக ஆடி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new record in t20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->