உலக அளவில் சாதிக்க முடியவில்லை : கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம் - Seithipunal
Seithipunal


ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் ‘ஈஷா கிராமோத்சவம்’ எனும் விளையாட்டுப் போட்டியை ஈரோட்டில் உள்ள டேஸ்வேலியில் நடத்தியது. பிரம்மாண்டமான இந்த விளையாட்டுப்போட்டியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்குப் பளு தூக்கும் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்னதாக ஈஷா தியான மைய நிறுவனர் சத்குருவும், கர்ணம் மல்லேஸ்வரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லேஸ்வரி “ ஈஷா மையத்தின் இந்த விளையாட்டு திருவிழா கிராமப்புறங்களில் விளையாட்டாய் பெருமளவு வளர்க்கும் முயற்சியாகும் என்றார் . இந்த முயற்சியை மேற்கொண்ட ஈஸாவிற்கு தன் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாகக் அவர் கூறினார்”.

கிராமப்புற விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டியே விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதாகவும், இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சியின்மை , தங்களை தகுதியாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மையங்கள் இல்லாமை, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமை ஆகியவையே முறையான பயிற்சி பெறுவதற்கு தடையாக இருப்பதாகவும், அதனால் இந்தியாவில் திறமையானவர்கள் இருந்தும் உலக அளவில் சாதிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

ஒரு விளையாட்டு வீரருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 6,௦௦௦ வரை தேவைப்படுகிறது.  அரசும், தனியார் நிறுவனங்களும் இதற்கு உதவி செய்ய முன்வரவேண்டும். சிறந்த கட்டமைப்பு வசதிகளை அவர்கள் செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்த வசதிகள் செய்துக் கொடுக்கப்படுமேயானால் இந்தியா உலக அரங்கில் விளையாட்டில் சிறந்து விளங்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் ஈஷா சார்பில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு மையத்தில் தான் பளு தூக்குதல், குத்துச்சண்டை, மற்றும் மல்யுத்தம் ஆகிய பயிற்சிகளை அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Olympic Champion Karnam Malleswari expressed her dissatisfaction towards poor infrastructure and practice in sports industry leads to hindrance in the performance of the sports persons.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->