உலககோப்பை : தவானை தொடர்ந்து மேலும் ஒருவர் விலகல்? அழைக்கப்பட்ட புதிய வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


உலக உலக கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணிக்கு வீரர்கள் காயம் அடைந்து இருப்பது, பெருத்த பின்னடைவாக இருந்து வருகிறது.  முதலில் காயமடைந்த ஷிகர் தவான் அணியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பாண்ட் சேர்க்கப்பட்டார். 

இதனிடையே வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேற, தற்போது வரை அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்காமல் அவர் அணியில் தொடர்வார் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்னும் இரண்டு போட்டிகளுக்கு விளையாடுவதில் சிக்கல் இருக்கும் என தெரிகிறது. 

இதனிடையே இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அணியுடன் மான்செஸ்டர் மைதானத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டு உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கலீல் அகமது, தீபக் சாகர், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில், இதில் நவ்தீப் சைனிக்கு தற்போது முன்னுரிமை தரப்பட்டுள்ளது. 

அவர் இந்திய அணியினருடன் மான்செஸ்டர் மைதானத்தில் பயிற்சியில்  ஈடுபட்டு வருகிறார். புவனேஸ்வர் குமார் ஒருவேளை குணமாகாத பட்சத்தில் அவருக்கு பதிலாக சைனி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஷிகர் தவான் இவ்வாறு ஓய்வில் இருக்கும்போது தான் இந்திய அணியினருடன் இணைந்து ரிஷப் பாண்ட் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணியினருடன் புதியதாக இணைக்கப்படும் போது பதற்றம், தயக்கம் முதலியவை ஏற்படும் என்பதால், இனி வரும் போட்டிகளில் முக்கியமான போட்டிகள் என்பதால் அதனை தவிர்க்க முன்கூட்டியே அணியினருடன் இணைந்து செயல்படுவதற்காக நவ்தீப் சைனி அழைக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது இந்திய பந்துவீச்சாளர்கள் இருவர் மட்டுமே அணியில் இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்களாகத்தான் விஜய் சங்கர், பாண்டியா அணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஸ்வர் குமார் தான் காயமடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புவனேஸ்வர் இன்று முதல் பயிற்சியை தொடங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது! வியூகத்தை மாற்றி அமைத்த ஸ்டாலின்! வெளியான அறிவிப்பால் உண்டான பரபரப்பு!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navdeep saini added to indian training session in CWC19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->