#BigBreaking || டெஸ்ட் போட்டியில் கால் பதிக்கிறார் நடராஜன்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலி ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, உமேஷ் யாதவ் காயம் அடைந்ததால் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்த்தால் பவுலிங் பலத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது ஷமி காயமடைந்த எடுத்து தமிழகத்தை சேர்ந்த நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "தாகூர், சைனி இருக்கிறார்கள். ஆனால் நடராஜனுக்கு வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கிறோம். நடராஜனுக்கு பிரகாசமாக வாய்ப்புள்ளது எனக் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிட்னியில் வரும் ஏழாம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATRAJAN IN IND VS AUS TEST MATCH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->