வெளியேறிய வீரர்., டெஸ்ட் மேட்சுக்கு தட்டி தூக்கப்படும் நம்ம நட்டு.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் போட்டி இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரு தினங்களுக்குமுன் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

முன்னதாக இரண்டாவது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சஷி பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக  ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 

தற்போது முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டியில் இருந்தும் முகமது ஷமி விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த 'யார்கர் கிங்' நடராஜனுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATARAJAN IND vs AUS TEST MATCH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->