இந்திய டெஸ்ட் அணியில் தமிழகத்தின் நடராஜன், சுந்தர் அறிமுகம்! ரஹானேவின் அதிரடி மாற்றங்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்த போட்டிக்காக சிட்னியிலிருந்து இந்திய அணி சென்றபோது பெரும்பாலான வீரர்கள் காயத்துடன் சென்றதால் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது.

கடந்த மூன்று போட்டிகளிலும் போட்டி தொடங்குவதற்கு முதல் நாளே அணியை அறிவித்து விட்ட இந்திய அணி, இந்த போட்டியில் இறுதி நிமிடம் வரை அறிவிக்க முடியாது எனவும், கடைசி நிமிடம் வரை வீரர்களுக்கு வாய்ப்பளித்து, உடற்தகுதி பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் 4 பேர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு  பதிலாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் என இரண்டு அறிமுக வீரர்களை இந்திய அணி களமிறக்கியுள்ளது. இருவருமே தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, ஜஸ்பிரிட் பும்ரா அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன், தாக்கூர் ஆகிய 4 பேரும் அணியில் இணைந்துள்ளனர். நடராஜன் இந்திய அணிக்காக களம் இறங்கும் 300 ஆவது  டெஸ்ட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா (விளையாடும் லெவன்) ரோஹித் சர்மா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே , மாயங்க் அகர்வால், ரிஷாப் பந்த் , வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், டி நடராஜன்

ஆஸ்திரேலியா (விளையாடும் லெவன்): டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு வேட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natarajan and sundar debut in indian test team against australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->