மும்பை அபாரம்! பந்தை காணடித்த பாண்டியா! பெங்களூருக்கு இமாலய இலக்கு!  - Seithipunal
Seithipunal


12  ஆவது ஐபிஎல் தொடரின் 7 ஆவது லீக் போட்டி ஆனது மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார். 

பெங்களூர் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் பேட்டிங் சொதப்பியதால் சென்னையிடம் தோல்வியடைந்தது. மும்பை  அணி டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த இரு அணிகளும் முதல் வெற்றியை பெறுவதற்காக இன்று மோதுகின்றனர். பெங்களூரு அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே மாற்றம் இல்லாமல் களமிறங்குகிறது. மும்பை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர் ராசிக் சலாம், பென் கட்டிங் நீக்கிவிட்டு இலங்கை அணியின் லசித் மலிங்கா, மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்கண்டேவை கொண்டுவந்துள்ளார்கள். கடந்த போட்டியில் காயமடைந்த ஜஸ்பிரிட்  பும்ராஹ்  இந்த போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கமாக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை அணியின் ரோகித் சர்மா  சிறப்பாக ஆடியதில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் அபாரமான தொடக்கத்தினை கொடுத்துள்ளார். இதற்கு முன்பாக 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரே ஒரு முறை  மட்டுமே 57 ரன்கள் எடுத்தார். இன்று அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்களில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 20 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்து களமிறங்கிய 8 பந்துகளில் 5 ரன்களை எடுத்து இருந்ததை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியிருப்பார்கள். ஆனால் சாகலின் அடுத்த மூன்று பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு பறக்கவிட ரசிகர்கள் ஆரவாரத்தில் மைதானமே அதிர்ந்தது. ஆனால் நான்காவது பந்தையும் சிக்சருக்கு தூக்க முயற்சிக்க சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாட மற்றவர்கள் வந்த வேகத்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு எல்லோரும் வாணவேடிக்கை காட்ட நினைத்து வெளியேறினார்கள். சூர்யகுமார் யாதவ் மட்டும் 38 ரன்கள் அடித்தார் அவரும் வாணவேடிக்கை காட்ட நினைத்து வெளியேறினார்.

இறுதியில் ஹர்டிக் பாண்டியா அதிரடி காட்ட மும்பை அணி சவாலான இலக்கை அடைந்தது. அவர் 14 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். அதில் 2 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார். அதில் ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு தூக்கி வெளியே அடித்தது குறிப்பிடத்தக்கது. முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்ததுள்ளது. பெங்களூர் அணியில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மும்பை அணியை இந்த இலக்கிற்குள் அடக்க முடிந்தது.  

English Summary

mumbai set big target to rcb


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal