ஒரே ஓவரில் நிலைகுலைந்த சென்னை! நொறுக்கி தள்ளிய பாண்டியா பொல்லார்ட்!  - Seithipunal
Seithipunal


12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட்  தொடரானது இந்தியாவில் முக்கிய நகரங்களில் களைகட்டி வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்  பரிதாபமான நிலையில் உள்ளது. 

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டிகாக் மற்றும் ரோஹித் சர்மா வழக்கம்போல சொதப்பி வெளியேற அதிர்ச்சி தொடக்கம் தான் மும்பை அணிக்கு கிடைத்தது. 4 ரன்களில் தீபக் சாகர் பந்து வீச்சில் கேதார் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டிகாக். 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா.  அதுக்கு அடுத்து களமிறங்கிய மூத்த வீரர் யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் சோபிக்காமல் 6 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்து தாகிர் பந்துவீச்சில் ரயுடுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதற்கடுத்து நிதானமாக ஆடிய சூர்யா  குமார், க்ருனால் பாண்டியா இணை அந்த அணி கௌரவமான இலக்கை நோக்கி பயணிக்க வைத்தது. சில  கேட்ச்கள் தவறிவிட கிடைத்த அதிஷ்ட வாய்ப்புகளில் 32 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 42 ரன்கள் குவித்து மோஹித் சர்மா பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறு பக்கத்தில் இருந்த சூர்யா குமார் யாதவ் அரைசதம் அடித்தார். அவர் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ஒரு கட்டத்தில் 130 ரன்களை அடிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 9 பந்துகளில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களும் பொல்லார்ட் 7 பந்துகளில் 2 சிக்சருடன் 17 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் மட்டும் 29 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரையில் தீபக் சகார், மோஹித் ஷர்மா, ஜடேஜா, பிராவோ, தாகிர்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

English Summary

mumbai reached unexpected score against chennai


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal