தோனியின் அதிரடி சிக்சர்கள்.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோ.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் இந்திய அணி கேப்டனுமான எம்.எஸ். தோனி, தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

இந்நிலையில் பிசிசிஐ தோனியின் அதிரடி சிக்ஸர்களை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதேபோல் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலியாவில் தோனி அடுத்த சிக்ஸர்களை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரரான எம்எஸ் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதி அதிலிருந்து எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. 

தோனி டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தற்போது ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நியூசிலாந்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni sixer video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->