ஹாட்ரிக் தோல்வி., மனம் திறந்த மகேந்திர சிங் தோனி! அச்சச்சோ., இதான் காரணமா?! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் சீசன் தொடரில் நேற்று நடந்த 18வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷேன் வாட்சன் - டு ப்லஸ்ஸி ஜோடி ஆரம்பம் முதல் வெற்றி வரை அதிரடியாகவும், நிதானமாகவும் மைதானத்தை தெறிக்க விட்டனர்.

முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. நேற்று ஆடிய ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை அணி அபாரமாக ஆடி மிகப்பெரிய ஒரு வெற்றியை எடுத்து உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், "இந்த ஆட்டத்தில் சின்னச்சின்ன விஷயங்களை நாங்கள் சரியாகவும், நேர்த்தியாகவும் செய்து முடித்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் அணிக்கு இப்படிப்பட்ட ஒரு தொடக்கம்தான் தேவைப்படுகிறது. அடுத்து வரும் ஆட்டங்களில் இதேபோன்ற ஒரு தொடக்கத்தை எதிர்பார்க்கலாம். வெற்றியும் எதிர்பார்க்கலாம். இதனை நான் முழுமையாக நம்புகிறேன்.

வாட்ஸ்அப் ஃபார்ம் பற்றி கவலை இல்லை. அவர் சிறப்பாகவே வலைப்பயிற்சியில் செயல்பட்டார். டு பிளஸ்சி எங்கள் அணிக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் அவரின் சிறப்பான சில ஷாட்டுகள் நேர்த்தியாக இருக்கும். பல நேரங்களில் எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை குழப்பும் படியான ஷாட்டுக்களை ஆடக்கூடியவர். இன்றைய ஆட்டத்தில்  இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்து இந்த ஆட்டத்தை சரியாக கொண்டு சென்றனர். 

கடந்த மூன்று போட்டிகளின் தோல்விகள் குறித்து சொல்வதென்றால், எதிரணியை நாங்கள் கட்டுப்டுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கு பல நெருக்கடிகள் அளித்திருக்க வேண்டும். அதை நாங்கள் செய்ய தவறி விட்டோம்" என்று கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni open talk about 3 match last issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->