நேற்று நடந்த டி20 போட்டியில் நடந்த தரமான சம்பவம்! அதுதான் தல தோனி!.. வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிதொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இதனையடுத்து இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது, மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 212 ரன்கள் குவித்துள்ளது.

 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறியது இந்த போட்டியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர் 43 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களும், ரோகித் சர்மா  38 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். 

ஆனால் இறுதியில் இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. இந்தநிலையில் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. 

இந்த ஆட்டத்தின்போது இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கொடியுடன் தோனியை நோக்கி ஓடி வந்தார். தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்பொழுது தரையில் விழ போன தேசியக்கொடியை கீழே விழாமல் தோனி கையில் எடுத்துக்கொண்டார். 
 

English Summary

ms dhoni in stadium


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal