ஒய்வு குறித்தான அனைத்து செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி! இலங்கை போட்டிக்கு முன்பாகவே.... தோனி அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் இறுகி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் ஆட்டங்களில் அடிப்படையில், அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் இரண்டு லீக் ஆட்டங்கள்  சம்பிரதாயங்கள் ஆட்டங்கள் என்றாலும், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையே புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்பதற்கான ஆட்டமாகவும் அமைய இருக்கிறது.

இன்று இந்திய அணி இலங்கையை அணியையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியையும் சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், இங்கிலாந்து அணியுடனான போட்டியில் ஏற்பட்ட தோல்வியானது, இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுவும் குறிப்பாக இறுதி நேரத்தில் மந்தமாக விளையாடியதாக இந்திய அணியின் மூத்த வீரர், நட்சத்திர வீரர் மகேந்திர  சிங் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதையடுத்து நடந்த வங்கதேச போட்டியிலும் அவருடைய ஆட்டத்தில் ரன் எடுக்கும் வேகம் குறைந்துவிட்டது என கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான சச்சின், கங்குலி கூட விமர்சனங்களை முன்வைக்க,  ரசிகர்களும், ஊடகங்களும் விமர்சிக்க ஆரம்பித்தனர். 

இடையில் இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் இந்திய வண்ணங்களில் மகேந்திர சிங் தோனி ஆடும் இறுதி  தொடர் என பெயரிடாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, தோனி ஓய்வு பெறப் போகிறார் என அனைத்து ஊடகங்களிலும் பரவியது.

இந்நிலையில் இது குறித்து தோனியே நேரடியாக செய்தி நிறுவனத்திற்கு பதிலளித்துள்ளார். நான் எப்போது ஒய்வு பெறப்போவது எப்போது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில், அடுத்த போட்டிக்கு முன்னதாகவே, அதாவது இலங்கை போட்டிக்கு முன்னதாகவே, நான் ஓய்வு பெற வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள், என தோனி தெரிவித்துள்ளார். 

தோனி ஒருவேளை ஒய்வு அறிவித்தால் அது பிறரின் நெருக்கடியால் தான் மட்டுமே இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் அவர் யாருக்கும் இடம் கொடுக்காமல் இன்றைய போட்டி முடிந்ததும் ஒய்வு அறிவித்தாலும் அறிவிக்கலாம். ஏனென்றால் தோனி அப்படிதான். திடீர் அதிர்ச்சி முடிவுகளை எடுப்பதில் எந்நேரமுமும் தயங்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே..  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni Clear about his retirement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->