இப்படி ஏமாத்தலாமா இங்கிலாந்து அணி! கோலியை காலியாக்குவேன் என்ற வீரரை கேலரியில் உட்கார வைத்த சோகம்!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணிகளில், பாதிக்கும் மேற்பட்ட அணிகள் எதிர்பார்க்கும் போட்டியாக இன்றைய இந்தியா இங்கிலாந்து அணிகள் போட்டி இருக்கிறது. 

இன்றைய இந்திய இங்கிலாந்து போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து, வங்காள தேசம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு என்பது இருக்கும். ஒரு வேளை இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் அணிகளின் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் உள்ளே அழைக்கப்பட்டு ஜேம்ஸ் வின்ஸ் நீக்கப்பட்டுள்ளார் . ஆனால் எதிர்ப்பாராத மாற்றமாக பிளாங்கெட் அணியில் இணைக்கப்பட்டு மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். 

மொயின் அலி நேற்று ஒரு நேர்காணலில் இந்திய அணியின் கேப்டன் கோலியை நான் காலியாக்குவேன் என சூளுரைத்தார். உலகின் மற்ற நாட்டு பந்துவீச்சாளர்கள் வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் எனது நல்ல நண்பரான கோலியை எளிதாக வீழ்த்துவேன் என்றார். அவரைதான் இங்கிலாந்து அணி நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளாங்கெட்டை அணியில் இணைத்துள்ளது, 

போட்டியில் விளையாடுபவர்கள் :

இங்கிலாந்து :  ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், இயோன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளென்கட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்

இந்தியா : கே.எல். ரஹூல், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ரிஷாப் பந்த், கேதர் ஜாதவ், எம் எஸ் தோனி, ஹர்டிக் பாண்டியா, முகம்மது ஷமி, குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜஸ்ப்ரிட் பும்ரா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

moin ali dropped from england squad against india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->