டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல்.? இந்திய அணியில் இணைந்த வேகப்பந்து வீச்சாளர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காயம் காரணமாக சமீபத்திய தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்த பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக தான் காயத்திலிருந்து குணமானவர் இரண்டு போட்டிகளில் விளையாடினார். தற்போது நடந்து வரும் தென்னாபிக்க தொடரில் இடம் பெற்றிருந்தார், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அவரது காயத்தின் தன்மை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயம் குணமடைய ஆறு முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம் எனவும், அதனால் அவர் இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜாவும் காயம் காரணமாக இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அணியின் துருப்பு சீட்டாக இருக்கும் பும்ராவும் இடம் பெறாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் உலகக்கோப்பை டி20 தொடருக்கான காத்திருப்போர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammad Siraj and umran Malik added T20 World Cup squad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->