ஒரே நேரத்தில் களத்தில் மூன்று பேட்ஸ்மேன்கள்! முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு சென்ற வீரர்!  - Seithipunal
Seithipunal


பெங்களூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் 4 வது இடத்தில் யார் இறங்குவது என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயருக்கும் ரிஷாப் பந்திற்கும் இடையே புரிதல் இல்லாமல் இறங்கிவிட்டனர் என விராட் கோலி தெரிவித்தார். எட்டாவது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தபோது, ​​ஐயர் மற்றும் பந்த் இருவரும் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியேறினர், இறுதியில் பந்த் களத்திற்கு வந்தார். 

இது குறித்து கோலி கூறுகையில், "அங்கு ஒரு தவறான புரிதல் இருந்துவிட்டதாக நான் நினைக்கிறேன், அதன்பிறகு தான் நான் அதனை புரிந்துகொண்டேன்" என்று போட்டிக்கு பிந்தைய பேட்டியில் கோலி கூறினார். "பேட்டிங் பயிற்சியாளர் அவர்கள் இருவரிடமும் ஒரு திட்டத்தினை சொல்லி இருந்தார். ஆனால் யார் எந்த இடத்தில் செல்ல வேண்டும் என்ற தவறான புரிதல் இருந்துவிட்டது. இது கொஞ்சம் வேடிக்கையானது, அவர்கள் இருவரும் களத்திற்கு புறப்பட்ட நிலையில் இருவரும் உள்ளே வந்திருந்தால் மிகவும் வேடிக்கையாக இருந்திருக்கும். அவர்கள் ஆடுகளத்தினை அடைந்திருந்தால் களத்தில் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்போம் இது அதனைவிட வேடிக்கையாக இருந்திருக்கும்.. 

"நாங்கள் திட்டமிட்டது என்னெவென்றால், 10 ஓவர்களுக்குப் பிறகு, ரிஷாப் உள்ளே வர வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். அதற்கு முன் வரவேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் உள்ளே செல்ல வேண்டும் என கூறியிருந்தோம். இருவரும் அதில் குழப்பமடைந்துள்ளனர், யார் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்" என கோலி கூறியுள்ளார். 

கோலி கூறுவதை வைத்து பார்த்தால் 10 ஆவது ஓவருக்கு பின்னால் செல்ல வேண்டிய பாண்ட், எட்டாவது ஓவரில் தவான் அவுட்டானதும் சென்றது தான் தவறான ஒன்றாகும். ஆனால் அதே சமயம் வலது கை இடது கை ஆட்டக்காரர்கள் என்ற திட்டப்படி பாண்ட் சென்றது சரிதான். ஒருவழியாக பாண்ட், ஸ்ரேயாஸ் இருவரையும் குழப்பிவிட்டு அணி நிர்வாகம் வேடிக்கையை நடத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mis communication rishabh pant with shreyas iyer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->