தல தோனி அவுட்டா? மெகா ஹிட் பிரபலம் வெளியிட்ட ஒத்த பதிவால், மோசமாக வச்சு செய்யும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில்,  இந்த சீசனின் இறுதி போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கி ஆரம்பத்தில் சொதப்பியபடி ஆடினர். அந்த அணியின் மட்டும்  பொல்லார்ட் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 3 சிக்சரும், 3 பவுண்டரியும் பறக்கவிட்டு  அதிகபட்சமாக 41 ரன்களை எடுத்தார். இறுதியில் மும்பை அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், தாகூர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான பிளசிஸ், வாட்சன் சிறப்பாக ஆடினார். 

சென்னை அணியின் பிளசிஸ், ரெய்னா, ராய்டு போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தல தோனி  2 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் ரன் அவுட் குறித்த முடிவை அறிவிப்பது மூன்றாவது நடுவர்களுக்கே கடினமாக அமைந்தது. 

பின்னர் அவுட் என அம்பயர்கள் அறிவித்தனர். இதனால் தோனி ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.மேலும் போட்டியின் இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில்மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் டோனி அவுட் இல்லை என பலரும் கூறி வந்த நிலையில் , பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் இது அவுட் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தவறான அம்பயரிங், சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது. சிஎஸ்க்கே ரசிகனாக இருக்க மிகவும் பெருமைப்படுகிறேன் . மும்பை அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு மும்பை அணி ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mi fans teqasing karthick suburaj for supporting thala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->