விஜய் ஷங்கருக்கு மாற்றாக அறிமுக வீரரை அறிவித்த பிசிசிஐ! விஜய் ஷங்கருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணிக்கு காயம் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இரண்டாவது போட்டியிலேயே காயமடைந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இரண்டு போட்டிகள் வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன் பிறகு காயம் சரியாகத நிலையில் அவர் அணியில் இருந்து வெளியேறினார். அதற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைக்கப்ட்டார். 

அவருக்கு அடுத்தபடியாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். அவர் அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயத்தினால் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தொடக்க ஆட்டக்காரர் இல்லாமல் இந்திய அணி சிரமப்பட்டு வரும் நிலையில், ரோகித் சர்மாவுடன் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விஜய் சங்கர் காயத்தினால் விலகுகிறாரா அல்லது தொடக்க ஆட்டக்காரர் தேவை என்பதால் நீக்கப்படுகிறாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இந்நிலையில் பிசிசிஐ தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சங்கர் ஜூன் 19 அன்று சவுத்தாம்ப்டனில் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் போது, பும்ராவின் துல்லியமான இடது பெருவிரலில் காயமடைந்தார். ஆனாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடினார். 

ஆனால் ஜூன் 27 அன்று நடந்த போட்டியில், அவரது கால்விரலின் நிலை மோசமடைந்தது மற்றும் சி.டி. ஸ்கேன் மூலம் இடது பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த காயம் குணமடைய குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விளையாட முடியாமல் வெளியேறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்திய தேர்வுக் குழு மயங்க் அகர்வாலை விஜய் சங்கரின் மாற்றாக அறிவித்துள்ளது. இந்திய அணி நிர்வாகத்திடம் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் வேண்டுமென கேட்டதை தொடர்ந்து இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் குறித்து பரிசீலிக்குமாறு ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் நிர்வாகத்தின் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

மயங்க் அகர்வால் இந்திய அணிக்காக இதுவரை இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayank agarwal fly to England to play in world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->