டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட தொடக்க வீரர்! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இதில் 4-1 என இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. 

3 போட்டிகள் கொண்ட இத்தொடர் நாளை வெல்லிங்டனில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இத்தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற இருப்பதால் அவர் விளையாட முடியாத நிலையில் உள்ளார். இதனால் அணியிலிருந்து நீக்கப்படுவதாகத் அந்நாட்டு கிரிக்கெட் கவுன்சில் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற உடற்தகுதி சோதனையிலும் அவர் தேரவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

martin guptill ruled out for t20


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->