மேலும் ஒருவருக்கு காயம்! உடனடியாக அணியுடன் இணையும் ஆல் ரவுண்டர்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் மழையால் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. 

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷெசாட் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் என்றும், அதேசமயம் அடுத்த இரண்டு போட்டிகள் மட்டும் விளையாடமாட்டார் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஷிகர் தவான் காயம் அடைந்த அதே போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் காயமடைந்து உள்ளார் என்ற செய்தியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தி உள்ளது. 

இதனால் நாளை நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். அவர் நாளை நடைபெறும் போட்டியில் களமிறங்குவாரா? அதற்கு முன் அணியுடன் இணைவாரா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

English Summary

marcus stoinis out of next game in world cup


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal