IND vs SA : இந்திய அணியால் வெற்றி பெற முடியாது.. ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்த முன்னாள் வீரர்.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதால் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .

இந்திய அணி கடைசியாக 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது .அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அசத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா எண்டினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி வீழ்த்துவது என்பது சாதாரண காரியம் கிடையாது என தெரிவித்துள்ளார். இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மைதானம் எவ்வாறு இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். 

மேலும் எங்களது வீரர்களின் பந்துவீச்சு நிச்சயம் இந்திய மிக பெரும் நெருக்கடியை கொடுக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது என்பது தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும். மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை என்பதால் இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அணி வீரர்களால் தென் ஆப்பிரிக்கா வீரர்களை தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

makhaya ntini press meet about ind vs sa test match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->