மிஸ்டர் கூல்.. கிங் மேக்கர்.... கேப்டன் கூல் என அழைக்கப்படுவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


மகேந்திரசிங் தோனி:

மிஸ்டர் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த முதல் கேப்டன் தோனி!

'தலைவன் பிறப்பதில்லை, காலமும் சூழலும் சிந்தனைகளுமே தலைவர்களை உருவாக்குகின்றன" என்ற தொடர் மகேந்திரசிங் தோனிக்குப் பொருந்தும்.

இவரை தல தோனி, மிஸ்டர் கூல், கேப்டன் கூல், மஹி, கிங் மேக்கர், எங்க தல தோனி, ஃபெஸ்ட் ஃபினிஷர், என கிரிக்கெட் ரசிகர்களால் ஏகப்பட்ட செல்லப்பெயர்களுடன் அழைக்கப்படுபவர்.

பிறப்பு : 

மகேந்திரசிங் தோனி (ஆயாநனெசய ளுiபொ னூழni) சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அறியப்படுகிறார். இவர் ஜூலை 7ஆம் தேதி 1981ஆம் ஆண்டு ராஞ்சியில் (ஜார்க்கண்டில்) பிறந்தார். 

பள்ளிக்கூட நாட்களில் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து ஆட்டங்களில் சிறந்து விளங்கினார். முதன்முதலாக பீகாரில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 1998-ல் விளையாடினார்.

குடும்பம் : 

பெற்றோர் பான் சிங், தேவகி தேவி ஆவார். இவருடைய தந்தை அரசு நிறுவனமான மேகானில் வேலைப் பார்த்தார். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும், நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஷாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தோனி, ஷாக்சி தம்பதிக்கு ஜிவா என்ற அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சாதனைகள் : 

2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன் மூலம் தோனி பிரபலமானார்.

அடுத்து, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான 28 வருடத்திற்கு பிறகு இந்திய அணி பெற்றதன் மூலம் தோனியின் புகழ் உச்சிக்கு சென்றது.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் என்கிற போர்வாளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பிரமாதமாக சுழற்றி பல போட்டிகளில், முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமை தோனியையே சேரும்.

ஒரு இன்னிங்சில் 6 பேரை அவுட்டாக்கி அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஸ்டம்ப் அவுட்கள் சாதனை, 6 முறை தொடர் நாயகன் விருது, 20-க்கும் மேற்பட்ட தடவை ஆட்டநாயகன் விருது, 324 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் (204) அடித்தது என இவரது சாதனைப் பட்டியல் நீளமானது.

ஹெலிகாப்டர் ஷாட் : 

டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடாமல் தடுப்பதற்காக ஃபாஸ்ட் பவுலர்கள் யார்க்கர்களை வீசுவார்கள். ஆனால் துல்லியமான யார்க்கர்களை கூட தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு அனுப்புவார். கைகளின் மணிக்கட்டுகளை சுழற்றி முழு பவருடன் தோனி அடிக்கும் ஷாட் மிஸ்ஸே ஆகாது. தோனியின் இந்த ஷாட் ஹெலிகாப்டர் ஷாட் என்று அழைக்கப்படுகிறது. 

விருதுகள் : 

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் கிரிக்கெட் அவையின் சிறந்த ஒரு நாள் பன்னாட்டு வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீP விருது, 2018ஆம் ஆண்டில் இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.

ஓய்வு : 

மகேந்திரசிங் தோனி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahindra singh dhoni history


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->