2020ம் ஆண்டு நடக்கவிருக்கும் IPL லின் புதிய விதிமுறைகள்..! கங்குலி வெளியிட்ட அறிவிப்பு..!  - Seithipunal
Seithipunal


பிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி மார்ச் 29ம் தேதி தொடங்குமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

தலைநகர் டெல்லியில் நேற்று ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கங்குலி பேசியதாவது, ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் மே 24ம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறும் என்றும் ஒரே நாளில் இருபோட்டிகள் என்பது 5 நாட்கள் மட்டுமே இந்த முறை நடைபெறும் என கூறினார்.

இந்தாண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கும் என்றும் அந்த போட்டியில் சென்னை-மும்பை அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து மே 12 வரை லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

Image result for ipl seithipunal

இந்த நிலையில், பிசிசிஐ தலைவருமான கங்குலி, இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும் என தெரிவித்தார்.

மேலும், நடக்கும் போட்டிகளில் விதிமுறைகள் என்றால், நோ பாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகியுள்ளது. போட்டியின் இடையே வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களம் இறங்கி விளையாட முடியும் என தெரிவித்தார். 

கொல்கத்தாவில் மே 14ம் தேதி முதல் தகுதிசுற்று போட்டியும், அதனை தொடர்ந்து மே 15ம் தேதி  பெங்களூரில் வெளியேற்றுதல் சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இதையடுத்து, இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி மே-16ம் தேதி சென்னையில் நடைபெறும். ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

little changes in ipl procedure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->