கருணாரத்னவை தொடர்ந்து அடுத்த வீரரையும் மருத்துவமனை அனுப்பிய ஆஸ்திரேலிய அணி! ஹெல்மட் தெறிக்க பதறவைக்கும் வீடியோ! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் உலகத்தையே பதற வைத்த பவுன்சர் பந்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளிப் ஹ்யுக்ஸ் சுயநினைவை இழந்து உயிரிழந்தார். மீண்டும் அதேபோல ஒரு பந்து நேற்றைய போட்டியில் வீசப்பட்டது. களத்தில் நின்ற அத்தனை வீரர்களும் ஓடிவந்து பதற்றமாக சூழ, தலையை பதம் பார்த்த அதே கணத்தில் சுருண்டு விழுந்தார் இலங்கை வீரர் கருணாரட்னே. படுக்கையில் விழுந்த வீரர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒரு குறுகிய கால சுற்றுப்பயணம் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கான்பெர்ராவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 387 ரன்களை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது அந்த அணியின் வீரர்கள் மூவர் சதமடிக்க 5 விக்கெட் இழப்பிற்கு  534 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதன் பின்னர் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணரத்னே திரிமன்னே ஜோடி இலங்கை அணிக்கு அபாரமான ஒரு தொடக்கத்தை கொடுத்தது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸின் ஒரு பவுன்சரில் எதிர்பாராதவிதமாக கருணரத்னே தலையில் அடி வாங்கி கீழே சாய்ந்தார். 32 ஆவது ஓவரை வீசிய பேட் கமின்ஸ் நான்காவது பந்தை  பவுன்சராக வீசினார். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தன் தலையை பின்பக்கமாக நகர்த்தி கீழே குனிய முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக கழுத்துக்கும், ஹெல்மெட்டுக்கும் இடையே அடித்ததால் நிலைகுலைந்து போன கருணரத்னே கீழே சரிந்தார். 

சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து தாக்கிய வேகத்தில் கீழே சரிந்து உடனடியாக மயங்கினர். இதனையடுத்து பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், இலங்கை ஆஸ்திரேலியா அணிகளின் உடற்தகுதி நிபுணர்கள், மைதான அவசர மருத்துவர்கள் என அனைவரும் மைதானத்தின் நடுவே சரிந்த வீரரை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்து வந்தனர். வந்த வேகத்தில் கருணாரத்னே முகத்தில் நீர் தெளிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவருடைய கை கால் அசைவு போன்றவற்றைப் பரிசோதித்த நிலையில் கழுத்துப் பகுதியில் வலி இருப்பதை கருணாரத்னே தெரிவித்தார். 

இதனை அடுத்து ஒரு சிறிய வாகனத்தில் ஸ்ட்ரெச்சர் பொருத்தப்பட்டு உடனடியாக ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றினார்கள். பின்னர் கருணாரத்னேக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பியதை  அடுத்து இன்றைய போட்டியில் களமிறங்கினார். ஆனால் அவர் களமிறங்கிய போது  மற்றொரு வீரரை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள் ஆஸ்திரேலிய அணியினர். குஷால் பெரேரா ரிச்சர்ட்சன் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடிவாங்க, ஹெல்மெட்டின் பாகங்கள் தெறித்து சிதறியது. இதனையடுத்து அவரும் சிகிச்சைக்காக மேற்கொண்டு ஆட்டத்தை தொடராமல் வெளியேறினார். இந்த தொடரில் காயமடையும் ஆறாவது  இலங்கை வீரர் குஷால் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kusal perera injured richardson Bouncer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->