வீரத்தமிழச்சி கோமதிக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு!! அவர் மாணவ மாணவியருக்கு கூறிய அறிவுரை!! - Seithipunal
Seithipunal



கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று தங்க மங்கையாக சாதனை படைத்தார்.  

இவர் திருச்சி மாவட்டத் தில் உள்ள பின்தங்கிய கிராமமான முடிகண்டத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். திருச்சி விமானநிலையத்தையே திக்குமுக்காட வைத்தனர் அப்பகுதி மக்கள். விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த வீரமங்கை  கோமதி மாரிமுத்திற்கு மலை அணிவித்து மகிழ்ந்தனர். திருச்சி விமான நிலையத்தில் மேள தாளங்களுடன்,  பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 இதனையடுத்து அங்கு பேசிய கோமதி மாரிமுத்து, அனைத்து தரப்பினரும் என்னை பாராட்டுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வது தான். அணைத்து மாணவ மாணவிகளும் படிப்பில் ஆர்வம் காட்டுவது போலவே விளையாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும் என கூறினார்.

என்னை போல் ஏராளமான விளையாட்டு வீரர்கள் நம் பகுதியில் உருவாக வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எனக்கு பயிற்சி அளிப்பதற்காக எனக்கு உறுதுணையாக இருந்த எனது தந்தை தற்போது என்னோடு இல்லாதது கவலையையும்,  மனவருத்தத்தையும் அளிக்கிறது என கண்ணீர் கசிந்தபடி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

komathi marimuthu adviced to students


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->