இனி வரும் போட்டிகளில் கோலி விளையாட தடையா? கோலிக்கு உண்டான புதிய சிக்கல்!! வெளியான அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியின் போது நடுவர் அலீம் தாரிடம் ஆக்ரோஷமான முறையில் விக்கெட் கேட்டு முன்னேறியதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அவரது ஆட்டக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் ஒரு குற்ற புள்ளியும் சேர்க்கப்பட்டது.  

ஏற்கனவே இதுபோன்ற நடுவர்களிடம் ஆக்ரோஷமான முறையில் விக்கெட் கேட்டு முன்னேறியதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பிரிட்டோரியாவில் நடைபெற்ற டெஸ்டின் போது முதல் குற்ற புள்ளியைப் பெற்றார். தற்போது சஸ்பெண்ட் செய்வதற்கான குற்றப்புள்ளி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இனி வரும் போட்டிகளிலும் இதுபோன்ற செயல்களால் ஒருவேளை நான்கு அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்றுவிட்டால் அது சஸ்பெண்ட் நடவடிக்கையாக மாறிவிடும்.

இனி வரும் போட்டிகளில் கோலி இதே போன்ற செயலில் ஈடுபட்டு நான்கு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் ஒரு டெஸ்ட்  போட்டி அல்லது இரண்டு ஒருநாள் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டி இதில் எந்த போட்டி முன்னதாக வருகிறதோ? அதில் விளையாட தடைவிதிக்கப்படும். அந்த வகையில் இந்தியா இன்னும் நான்கு லீக் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஒருவேளை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மோசமான சம்பவத்தால் நான்கு புள்ளிகள் பெற்றுவிட்டால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவது கஷ்டமாகிவிடும். ஒருவேளை விராட் கோலி தடைபெற்றால், அதை இந்திய அணியால் ஜீரணிக்க முடியாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koli may suspend in next match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->