தென்னாபிரிக்க அணி பரிதாபம்! சிதறவிட்ட இந்தியா! தைரியமாக முடிவெடுத்த கோலி! - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆனது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று  வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் இரட்டை சதம், அஜிங்கிய ரஹானேவின் சதம் கைகொடுக்க 9 விக்கெட் இழப்பிற்கு 497 குவித்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எல்கர், டி காக் 9 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததால், பரிதாபமான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. 

மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டூ பிளசிஸ் அவுட்டாக அதிர்ச்சி காத்து இருந்தது. அதை அடுத்து களமிறங்கிய ஹம்சா, பவுமா ஜோடி 90  ரன்கள் எடுத்த நிலையில். இந்திய சுழற்பந்து வீச்சாளர் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். 

மிக சிறப்ப மிக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷமி, ஜடேஜா, நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அஸ்வின் விக்கெட் எடுக்காமலே தென்னாபிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 335 ரன்களை  முன்னிலையாக பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்கஅணியையே மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. 

கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா பாலோ ஆன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாலோ ஆன் கொடுக்க எப்போதும் யோசிக்கும் கோலி இன்று தென்னாபிரிக்க அணியை உடனடியாக  இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட அழைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kohli enforced follow on to south africa in ranchi test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->