ரோகித் சதங்களுக்கிடையே, சத்தமே இல்லாமல் கோலி படைத்த சாதனை!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு ஏழு வெற்றிகள் கிடைக்க மிக முக்கிய காரணமாக அமைந்தது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான மற்றும் அதிரடியான பேட்டிங் தான் என்றால் அது மிகையாகாது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மா ஷிகர் தவான் விராட் கோலி ஆகியோர் மட்டுமே, அணியின் 60 சதவீத ரன்களை எடுத்துள்ளார்கள். 

இதில் ரோகித் சர்மா 5 சதங்களுடன் 647 ரன்களுடன் தொடரின் முதல் வீரராக இருக்கிறார். அதிக சதங்கள் அடித்ததாலோ, என்னவோ கோலி இந்த தொடரில் செய்த சாதனைகள் வெளியே வராமலேயே போய் விட்டன. இந்த தொடரில் 5 அரை சதங்கள் அடித்துள்ள நிலையில் அவரும் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

மேலும் ஒட்டுமொத்தமாக உலக கோப்பை வரலாற்றில் இந்திய சார்பில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற அரிய சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் இந்த சாதனையை செய்திருந்தார்கள். இந்தப் பட்டியலில் கடந்த போட்டியில் விராட் கோலி இணைந்துள்ளார். அவர் தற்போது வரை 1029 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்த பட்டியலில் மேலும் ஒரு வீரர் இணைவதற்கு இன்று வாய்ப்பு உள்ளது என தற்போது தெரியவந்துள்ளது. . அப்போது அவர் 4-வது வீரராக அந்த பட்டியலில் இணைந்து கொள்வார். இதுவரை 16 இன்னிங்சில் மட்டுமே ரோஹித் ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kohli Creates New Record With Sachin Sourav


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->