கோலி, அகர்வால் அரைசதத்துடன் இந்தியா ரன்கள் குவிப்பு! ஏமாற்றம் அளித்த வெஸ்ட் இண்டீஸ்!  - Seithipunal
Seithipunal


இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஆடுகளத்தில் அதிகளவு புற்கள் இருப்பதால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. ரோஹித் ஷர்மா, சஹா, அஸ்வின் இந்த ஆட்டத்திலும் பென்ச் வீரர்களாக அமரவைக்கப்பட்டார்கள். 

மேற்கு இந்திய தீவு அணிகளில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. அந்த அணியில் 140 கிலோ எடை கொண்ட வீரர் ரஹ்கீம் கார்ன்வால் இடம்பெற்றுள்ளார். அவர் ஆட்டத்தை இல்லை, ஆளை பார்த்தாலே மிரட்டலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆட்டத்திலும் மிரட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது) விக்கெட் கீப்பர் ஹமில்டனும் இடம்பெற்றுள்ளார். 

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ராகுல், அகர்வால் களமிறங்கினர். ஹோல்டரின் கணிப்பு பொய்க்கும் வகையில் இந்திய வீரர்கள் முதல் 6 ஓவரில் 32 ரன்களை அடித்தனர். ஆனால் நான் எடுத்த முடிவு எப்படி பொய்க்கும் என்பதனை நிரூபிக்க ஹோல்டரே களத்தில் இறங்கினார். அதனை அவர் நிரூபிக்கும் விதமாக தன்னுடைய முதல் ஓவரிலேயே ஒரு அசத்தலான பந்தில் ராகுலை காலி செய்துள்ளார். ராகுல் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த வந்த புஜாரா 6 ரன்னில் ரஹீம் கார்ன்வால் பந்து வீச்சில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.  

இதனையடுத்து வந்த கேப்டன் கோலி, அகர்வால் உடன் ஜோடி சேர்ந்தார். மிகவும் நிதானமாக விளையாடிய அவர்கள் ஹோல்டர்,  கார்ன்வாலின் பந்துவீச்சை சாமர்த்தியமாக சந்தித்தார்கள். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்டில் தன்னுடைய 3-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 55 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்து வந்த துணை கேப்டன் ரகானே கேப்டன் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய விராட் கோலி இந்த தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது அரை சதத்தை கடந்தார். பின்னர் நிதானமாக விளையாடிய ரகானே 24 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 76 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.  

முன்னணி விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அடுத்து வந்த ஹனுமா விகாரி, ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புடன் ஆடி அதற்கு மேல் விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது. நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தனர்.  விகாரி 80 பந்துகளில் 42 ரன்களிலும், ரிஷப் பந்த் 64 பந்துகளில் 27 ரன்களிலும் ஆடி வருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரோச், ரஹீம் கார்ன்வால் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அறிமுக போட்டியில் களம் இறங்கிய மிரட்டலான வீரர் ரஹீம் கார்ன்வால் ஒரு விக்கெட் மற்றும் 2 கேட்ச் பிடித்து அசத்தி உள்ளார். பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கணிப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்திய அணியின் பேட்டிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kohli and Agarwal scored half centuries against west indies


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->