இவர் தான் கே.எல்.ராகுலின் காதலியா..? - கே.எல்.ராகுல் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக இந்தியா  கிரிக்கெட் வீரர்களும்,சினிமா நடிகைகளும் நெருங்கி பழகுவது வழக்கம் ஆகியுள்ளது. அவ்வாறு நெருங்கி பழகுவதால் இருவரிடத்திலும் காதல் மலர்ந்துள்ளதாக பல நேரங்களில் பல வீரர்களை பற்றியும் செய்திகள் வெளியாகும்.

சில நேரங்களில் அந்த செய்தியில் உண்மையும் இருக்கும்.அந்த வகையில் பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். 

உதாரணமாக  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டதை கூறலாம்.

அந்தவகையில் நட்சத்திர  கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும் அடிக்கடி பல இளம் நடிகைகளுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் நடிகை இல்லாமல் சற்று வித்தியாசமாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நெருங்கிய தோழி அகன்ஷா ரஞ்சனை ,கேஎல் ராகுல் காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் தகவல் வெளியாகி  வைரலாக பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கூறியதாவது:-'இதையெல்லாம் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.இதனாலேயே நான் பொதுவாக செய்தி தாள்களை  வாசிப்பதில்லை.

மேலும் அவர்கள் என்னை பற்றி  என்ன எழுதிருக்கிறார்கள் என்பது பற்றியும் நான் சிந்திப்பதில்லை.நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே விரும்புகின்றேன்.

மேலும் அதுபற்றி பேச விரும்பவில்லை.நான் இப்போதைக்கு கிரிக்கெட்டை மட்டும் தான் காதலிக்கிறேன். ஒருவேளை எனக்கு அவ்வாறு ஏதாவது வந்தால் நான் உங்களிடம் நிச்சயம் தெரிவிப்பேன்'  என்று அதிரடியாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K.L.Rahul secret love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->