#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 13வது தொடரின் 5வது போட்டியாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அட்ரஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இன்று  நடைபெற உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்தது.

இன்று நடக்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு தனது வெற்றி கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மும்பை அணியில் பெரிதாக மாற்றம் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அட்ரஸ் நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, ஐ.பி.எல். கோப்பையை இரண்டு முறை கைப்பற்றி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் கொல்கத்தா வீரர்கள் இன்றைய போட்டியில் கொஞ்சம் பொறுப்புடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை அணி பேட் செய்ய களமிறங்க உள்ளது.

மும்பை அணியில்  R சர்மா, Q டீ காக், S யாதவ் , S திவாரி , H பாண்டிய , K பொல்லார்ட் , K பாண்டிய , J பட்டின்சன் , R சாகர் , T போல்ட், J பும்ராஹ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நாட் ரைடர்ஸ் அணியில், S நரின் , S கில் , N ராணா, E மோர்கன், A ரசல், D கார்த்திக், N நாயக், P சும்மின்ஸ், K யாதவ், S வாரியர், S மவி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKR vs MI TEAM PLAYERS LIST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->