கபில் தேவுக்கு புதிய பதவி., வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் உள்ளது. 

இதைத்தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை கடந்த ஜூலை மாதம் அம்மாநில அரசு வழங்கியது.

இந்நிலையில், ஹரியானாவில் சோனேபட் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள மாநில விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட உள்ளார் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளர்.

இந்தியாவிற்கு 1983ம் ஆண்டில் முதல் உலக கோப்பையை பெற்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இவர் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kapil dev has new posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->