உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர் விலகல்!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து அந்த அணியின் முன்னணி வீரர் ஜெ ரிச்சர்ட்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக விலகி உள்ளார். வருகின்ற மே 29ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உலக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டி தொடருக்கான அணியினை ஒவ்வொரு அணியும் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அணியினை இந்த மாதம் 23ம் தேதிக்குள் ஐசிசியிடம் ஒவ்வொரு அணியும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவருக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். முதன்முதலில் அணி அறிவிக்கப்பட்ட பொழுதே அணியில்  இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் ஹஸ்லேவூட் அணியில் இடம் பெறாதது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் ரிச்சர்ட்சன் விலகிய நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனே ரிச்சர்ட்சோனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சில் பலமாகவே உள்ளது. ஏற்கனவே ஸ்டார்க், கம்மின்ஸ், கவுடர் நைல் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jhye richardson out of world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->