#BREAKNG : டி20 உலக கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

காயம் காரணமாக சமீபத்திய தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்த பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக தான் காயத்திலிருந்து குணமானவர் 2வது போட்டியில் மட்டும் விளையாடினார். தற்போது நடந்து வரும் தென்னாபிக்க தொடரில் இடம் பெற்றிருந்தார் ஆனால் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதே நேரத்தில் அவரது காயத்தின் தன்மை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயம் குணமடைய 6 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், அதனால் அவர் டி20 உலக கோப்பையில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

முன்னதாக இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜாவும் காயம் காரணமாக இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அணியின் துருப்பு சீட்டாக இருக்கும் பும்ராவும் இடம் பெறாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit Bumrah ruled out of T20 world cup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->