புதுக்கோட்டை மாவட்டம் செங்கவளநாட்டில், அதிவிமர்சியாக நடக்கும் ஜல்லிக்கட்டு! காத்திருக்கும் பிரமாண்ட பரிசுகள்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செங்களநாட்டில் (கோவிலூர் ) மாபெரும் ஜல்லிக்கட்டு விழா மிக சிறப்பாக இன்று அதிகாலையில் தொடங்கியது. செங்கவள நாடு என்பது, குப்பகுடி, கரும்பிரான்கோட்டை, பாத்தம்பட்டி, புதுக்கோட்டை விடுதி, நெம்மக்கோட்டை , மேலக்கோட்டை, கோவிலூர், குழந்தை விநாயகர் கோட்டை  உள்ளிட்ட  ஊர்களை சேர்ந்த பகுதியாகும்.

தமிழ்நாட்டிலே அதிகப்படியான வாடிவாசல் உள்ள மாவட்டம் புதுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அதிகப்படியான காளைகளை அவிழ்த்து கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூரில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விளையாட்டில் 800க்கு மேலான காளைகளும், 300க்கு அதிகமான காளையர்களும் பங்கு பெறுகின்றனர். விளையாட்டில் வெற்றிபெறும் காளை மற்றும் காளையர்களுக்கும் பைக், சைக்கிள், ஏர் கூலர், மின்விசிரி, தங்கம், வெள்ளி என பிரமாண்ட பரிசு பொருட்களை அளித்துவருகின்றனர் செங்கவள நாட்டார்கள்.

இந்த வீர விளையாட்டினை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒன்று கூடி விளையாட்டினை ரசித்து வருகின்றனர். இந்த வீர விளையாட்டில், சிறப்பாக களத்தில் விளையாடிய காளைகளுக்கும்,  சிறப்பாக அதிக காளைகளை தழுவிய காளையர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளனர்.

இன்று நடக்கும் வீர விளையாட்டில், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

English Summary

Jallikattu in pudukkottai


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal