தனது முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த ஆல்ரவுண்டர்.! இந்திய கிரிக்கெட்டுக்கு மொத்தமா முழுக்கு..!  - Seithipunal
Seithipunal


இந்திய வீரரான இர்பான் பதான் தன்னுடைய அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கின்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்தவர் இர்பான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 29 டெஸ்ட் (100 விக்கெட்) போட்டிகளையும், 120 ஒருநாள் (173 விக்கெட்) போட்டிகளையும் , 24 டி-20 போட்டிகளையும் விளையாடி இறுக்கினார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி சாதனை செய்த முதல் பவுலர் என்று அவர் வரலாறு படைத்தவர் ஆவார். 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் தொடர்சியாக சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் என்று மூன்று பேரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி காட்டினார். 

தனது அசத்தல் சுவிங் பவுலிங்கால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் இர்பான் ஒப்பிடப்பட்டார். 2007ல் இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை வெல்ல இவர் உறுதுணையாக இருந்தவர். இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 

இவர், கடைசியாக கடந்த 2012ல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irpan pathan announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->