ஐபிஎல் 2021! வெளியேற்றப்பட்ட வீரர்களும், தக்கவைத்த வீரர்களும், மொத்தமாக ஒரே கிளிக்கில்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2021 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த  வீரர்கள், வெளியேற்றப்பட்ட  வீரர்கள் பட்டியலை வெளியிட கடைசி நாளான நேற்று வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் : 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹாசில்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன்( ஓய்வு) ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ.22.9 கோடியாக உயர்ந்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் : 

மும்பை இந்தியன்ஸ் அணியானது, ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், டி காக், அன்மோல் பிரீத் சிங், ஆதித்ய தாரே, கிறிஸ் லின், சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொலார்ட், ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், பும்ரா, மோசின் கான், ராகுல் சாஹர், அங்குல் ராய் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

மிட்செல் மெக்லினாகன், ஜேம்ஸ் பேட்டின்சன், லஷித் மலிங்கா, நேதன் கூல்ட்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பலவந்த் ராய் சிங் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ15.35 கோடியாக உயர்ந்துள்ளது. 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், சாஹல், தேவ்தத் படிக்கால், பிலிப், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, ஷாபாஸ் அகமது, பவன் தேஷ்பாண்டே, ஆடம் ஸாம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

கிறிஸ் மோரிஸ், ஏரோன் பிஞ்ச், மொயின் அலி, இசுரு உதனா, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், பவன் நெகி, குர்கீரத் மான், பார்த்திவ் படேல், டேல் ஸ்டெய்ன் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ.35.7 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸல், கம்லேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்கூசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், சிவம் மாவி, ஷுப்மன் கில், சுனில் நரைன், மோர்கன், பாட் கமின்ஸ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஹாரி குர்னி, அலி கான் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

எம்.சித்தார்த், நிகில் நாயக், சித்தேஷ் லாத், கிறிஸ் கிரீன், டாம் பேன்ட்டன் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ.10.85 கோடியாக உயர்ந்துள்ளது. 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பேசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமெட், டி.நடராஜன், விஜய் சங்கர், சஹா, அப்துல் சமது, மிட்செல் மார்ஷ், ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

சஞ்சய் யாதவ், சந்தீப் பாவங்கா, பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், யரா பிரிதிவிராஜ். ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ.10.75 கோடியாக உயர்ந்துள்ளது. 

டெல்லி கேப்பிடல்ஸ் :

டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது,  ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ஷிகர் தவண், பிரிதிவி ஷா, ஆர்.அஸ்வின், இஷாந்த் சர்மா, அஜிங்கிய ரஹானே, அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிம்ரன் ஹெட்மையர், கேகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்டியே, பிரவிண் துபே, லலித் யாதவ். கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

கீமோ பால், சந்தீப் லாமிஷேன், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ஜேசன் ராய் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை ரூ.12.8  கோடியாக உயர்ந்துள்ளது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, ராகுல், கெய்ல், மயங்க் அகர்வால், பூரன், மந்தீப் சிங், சர்பராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், இஷான் போரெல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கவுதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம்,  விலோயென், கருண் நாயர், சுஜித் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை  ரூ.53.2  கோடியாக உயர்ந்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, சஞ்சு சாம்சன், மஹிபால் லோம்ரோர், மனன் வோரா, ரியான் பராக், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், மயங்க் மார்க்கண்டே, ஆர்ச்சர், ஸ்ரேயாச் கோபால், உனாட்கட், கார்த்தி தியாகி, டை, ஸ்டோக்ஸ், ராகுல் திவேத்தியா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், அனுஜ் ராவத் ஆகிய வீரர்களை தக்கவைத்துள்ளது. 

ஸ்டீவ் ஸ்மித், வருண் ஆரோன், டாம் கரன், அங்கிட் ராஜ்புத், அனிருத்தா ஜோஷி, ஷஷாங்க் சிங், ஒஷேன் தாமஸ், ஆகாஷ் சிங் ஆகிய வீரர்களை வெளியேற்றியதன் மூலம் கையிருப்புத் தொகை  ரூ.34.85  கோடியாக உயர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2021 retention Full Details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->