தொடங்கியது ஐபிஎல் திருவிழா! டாஸ் வென்ற தல தோனி! பெங்களூர் பேட்டிங்! ஆச்சர்யப்பட வைக்கும் சென்னை அணியின் தேர்வு!  - Seithipunal
Seithipunal


உலக அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய 20 ஓவர் போட்டி தொடரான ஐபிஎல் தொடரின் 12வது சீசன் இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் நடைபெறும் தொடக்க விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அந்த தொடக்க விழாவிற்கு செலவு ஆகும் 20 கோடி ரூபாயையும் அன்மையில் தீவிரவாதிகளால் உயிரிழந்த இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக அளிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதேபோல இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் தொகையினையும் அவர்களுக்கு நிதியாக அளிப்பதற்கு கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. 

இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன இதன்படி அணியின் கேப்டன்களான விராட் கோலி தோனி இருவரும் மைதானத்தின் நடுவே செல்ல ரசிகர்கள் ஆரவாரத்தில் மைதானம் அதிர்ந்த்து. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இங்கே கடுமையான பனி பொழிவதால் இரண்டாவதாக பேட்டிங் செய்வது சிறப்பாக இருக்கும். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்று கணிக்க முடியவில்லை.  அதனால் நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்ய விரும்புகிறோம் என தோனி கூறினார். முதல் போட்டியிலேயே ஆச்சரியம் அளிக்கும் விதமாக சென்னை அணியில் நான்கு வெளிநாட்டுக்காரர்களை எடுப்பதற்கு பதிலாக மூன்று பேரை மட்டும் எடுத்துள்ளார்கள். வாட்சன், பிராவோ, தாஹிர்  3 பேர் மட்டுமே சென்னை  அணி எடுத்துள்ளது. 

மறுபுறம் விராட் கோலி நாங்கள் முதலில் பந்து வீச விருப்பப்பட்டோம், ஆனால் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  எங்கள் அணியில் வெளிநாட்டுக்காரர்கள் டிவிலியர்ஸ், மொயின் அலி, ஹாட்மெயர், காலின் க்ரந்தோமே ஆகியோர் விளையாடுவார்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl opening match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->