ஐபிஎல்.. மீண்டும் போட்டியுடன் புறப்படும் டீம்கள்.? ஐபிஎல் எங்கு நடக்க போகிறது தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் 14வது ஐபிஎல் போட்டி ஆரம்பித்த நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலவரையின்றி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 30 போட்டிகள் கிட்டத்தட்ட மீதமுள்ளது. இந்த போட்டிகள் எல்லாம் எப்போது எங்கு நடத்தப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தி இருப்பது, ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்த ஐபிஎல் குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் ஒரு மைதானத்தில் மட்டும் தொடர்ச்சியாக போட்டிகள் நடத்தப்படும் என்று பேசப்படுகிறது.

இந்த வருடத்தின் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடரும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடக்க இருப்பதால் பிசிசிஐ என்ன முடிவு செய்யும் என்பது பொறுத்திருந்து தான் தெரியவரும். கடந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே, இம்முறையும் அங்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl may postpone to september


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->