இறுதி சுற்று : அடேங்கப்பா 11 பேர் சென்னையா? அய்யோ அம்மா நாங்க 11 பேர் டெல்லியா?! - Seithipunal
Seithipunal



14-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த தொடரின் அரையிறுதி என்று அழைக்கப்படும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று தொடங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோத உள்ளன. 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் அணி லீக் சுற்றின் 14 ஆட்டங்களில் 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில், கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்தாலும், அடுத்து கலைமிரங்கும் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கேப்டன் டோனி சொற்ப ரன்களில் அவுட் ஆகி அணியை தோல்விக்கு எடுத்து செல்கின்றனர். ரவீந்தர் ஜடேஜா இல்லை என்றல் தோனி ஆட்டமிழக்கும் போதே ஆட்டம் முடிந்து விட்டது என்று சொல்லிவிடலாம்.

இதனை மட்டும் சென்னை அணி சரி செய்து இன்று சிறப்பாக ஆடினால் நிச்சயம் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆரம்பம் முதல் ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றிகளை குவித்து வருகிறது. லீக் சுற்றின் 14 ஆட்டங்களில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி பெற்று முதலிடம் வந்தது. தோல்வியடைந்த  அந்த 4 ஆட்டங்களில் கூட வெற்றியின் அருகில் வந்தே கோட்டைவிட்டிருக்கிறார்கள். 

ஷிகர் தவான், பிரித்வி ஷா, கேப்டன் ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கின்றனர். பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ரபடா, அஸ்வின் ஆகியோரும் தங்களது பங்கை சரியாய் செய்து வருகின்றனர்.

மேலும், குறிப்பாக லீக் போட்டிகளில் சென்னை அணியை 7 விக்கெட், 3 விக்கெட் வித்தியாசங்களில் டெல்லி அணி வென்றுள்ளது. எப்படி பார்த்தாலும் டெல்லி அணி மிக வலிமையாக உள்ளது. சென்னை அணிக்கு இன்று கடுமையான சவாலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும், தோல்வியடையும் அணி இறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சற்றுமுன் டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலி பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

சென்னை அணி : ருதுராஜ் கெய்க்வாட், பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட். (ரெய்னா இடம்பெறவில்லை)

டெல்லி அணி : பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, அன்ரிச் நோர்டியா, அவேஷ் கான், டி குர்ரான்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl csk vs dc qly one


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->