அபார வெற்றி., மரண அடி கொடுத்த ராஜஸ்தான்.!! - Seithipunal
Seithipunal



ஐபிஎல் 47 வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

அதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல், அதிரடியாகவும், நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடி செஞ்சுரி (101) அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ ப்ளசி 25 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி தனது அதிரடி ஆட்டத்தால் 21 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அம்பத்தி ராயுடு 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க. 

அடுத்து களமிறங்கிய ஜடேஜா மைதானத்தில் அனல்பறக்க வைத்தார். 15 பந்துகளில் 35 ரன்களை விளாசி அணியின் ரன்னை உயர்த்தினார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, சென்னை அணியின் பந்து வீச்சை கிழித்து எடுத்து.

12 பந்துகளை சந்தித்த எவின் லீவிஸ் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட ௨௭ ரன்களை விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 19 பந்தில், 3 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

சஞ்சு சாம்சன் உடன் கை கோர்த்த சிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் அரைசதம் கண்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் தன் பங்குக்கு பவுண்டரிகளை விலாச., அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 165 ரன்களை தொட்டது.

கிட்டத்தட்ட ராஜஸ்தான் அணி வெற்றிபெறுவது உறுதியான நிலையில், சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில் 18.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவம் துபே 64 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 47th match csk loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->