#IPL2021: பலமான ராஜஸ்தானை., பந்தாடுமா பஞ்சாப்.?! இன்றைய ஆட்டத்தின் யாருக்கு வெற்றி வாய்ப்பு.!  - Seithipunal
Seithipunal


14 வது ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இதில், டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் - லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள்.,

கேப்டன் சஞ்சுசாம்சன், 
பென்ஸ்டோக்ஸ், 
பட்லர், 
கிறிஸ்மேரிஸ், 
ராகுல் திவேதியா. 

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள்.,

கேப்டன் லோகேஷ் ராகுல், 
மயங்க்அகர்வால், 
கிறிஸ்கெய்ல், 
நிக்கோலஸ் பூரன்.

இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளது. இதில் ராஜஸ்தான் அணி 12 வெற்றிகளையும். பஞ்சாப் அணி 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 punjab vs rajanthan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->