#IPLBreaking: இலக்கை நிர்ணயம் செய்த மும்பை.. களமிறங்கும் ஆர்.சி.பி..! - Seithipunal
Seithipunal


டாஸை வென்ற ஆர்.சி.பி பீல்டிங் தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்த மும்பை அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம்காண்கிறது. 

இன்றைய மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக ரோஹித் சர்மா (கேப்டன்), கிரிஸ் லின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் பவுல்ட், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சார்பாக விராட் கோலி (கேப்டன்), ரஜத் பட்டிதர், ஏபி டிவில்லியர்ஸ் (டபிள்யூ), க்ளென் மேக்ஸ்வெல், வாஷிங்டன் சுந்தர், டான் கிரிஸ்டியன், கைல் ஜாமீசன், ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

டாஸை வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து, மும்பை அணி பேட்டிங் செய்கிறது. ஆர்.சி.பி - எம்.ஐ அணியுடன் கொண்ட 10 வருட பனிப்போரை இந்த போட்டியில் நிறைவு செய்து வெற்றிவாகை சூடுமா? என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். 

முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா - கிரிஸ் லீன் ஜோடி களமிறங்கினர். முதல் ஓவரை எம்.சிராஜ் போட்ட நிலையில், 5 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டார். இதனைத்தொடர்ந்து ரோஹித் ஷர்மா - கிரிஸ் லீன் ஜோடி நின்று ஆடும் என்று எதிர்பார்த்த நிலையில், அணியின் 24 ஆவது ரன்னில் ரோஹித் ஷர்மா அவுட்டாகினர். ரோஹித் சர்மா 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, கிரிஸ் லீன் - சூரியகுமார் ஜோடி களமிறங்கியது. சூரிய குமார் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய நிலையில், 23 பந்துகளில் 31 ரன்கள் அடித்து கேட் அவுட் ஆகினார். இதன்போது அணி 94 ரன்களில் இருந்தது. மறுமுனையில் கிரீஸ் லீன் நின்று விளையாடி 42 ரன்களை குவித்திருந்தார். 

இதன்பின்னர், கிரீஸ் லீன் - இஷாந்த் கிஷன் ஜோடி களமிறங்கியது. நின்று ஆடிய கிரிஸ் லின் திடீரென தூக்கி அடித்ததால், பந்து எளிமையாக பீல்டர்களின் கைகளில் சிக்கி அவுட்டாகினார். இதனால் கிரீஸ் லீன் 35 பந்துகளில் 49 ரன்கள் அடித்து வெளியேறினார். அப்போது 13 ஓவரில் அணியின் ரன்கள் 105 ஆக இருந்தது. 

இதனைத்தொடர்ந்து இஷாந்த் கிஷன் - ஹர்திக் பாண்டியா ஜோடி களமிறங்கியது. ஹர்திக் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எல்.பி.டபிள்யூ அவுட் வந்தது. இதனையடுத்து ரிவீவ்யூ சென்றதில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன்போது மும்பை அணியின் ரன் 16 ஓவர்களில் 135 க்கு 4 விக்கெட் என்ற அளவில் இருந்தது. 

இதனையடுத்து, இஷாந்த் கிஷன் - கிரோன் பொலார்ட் ஜோடி களமிறங்கியது. இஷாந்த் கிஷான்19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிரோன் பொலார்ட் - குர்னால் பாண்டியா ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் இறுதியில் அணிக்கான ரன்களை குவிக்க வீரர்கள் முயற்சி செய்தது, ஆட்டத்தினை பரபரப்பாகியது.

இறுதியில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இலக்கவே, மும்பை அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், இறுதியில் 19.4 ஓவரில் 8 விக்கெட்டை மும்பை அணி இழந்தது. 158 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் இறுதியில், 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டை பறிகொடுத்து மும்பை அணி வெளியேற, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி அணி களமிறங்கவுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 MI Vs RCB Match MI Declare Run to RCB Team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->