#IPL_Breaking: சென்னை சிங்கங்கள் Vs மும்பை..! விசில் போட்டு, தல தீபாவளியை காட்டுமா சென்னை?..! - Seithipunal
Seithipunal


டாஸை வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 ஆவது போட்டித்தொடர் இன்று (01/05/2021) நடைபெறவுள்ள நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. 

இன்றைய போட்டி, புதுடெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியை காண ஏற்கனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்று ஐ.பி.எல் தொடரின் இரு துருவங்களாக மற்றும் வெற்றிக்கே சொந்தக்காரர்களாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறுவதால் ரசிகர்களிடையே ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக எஃப் டு பிளெசிஸ், ஆர் கெய்க்வாட், எம் அலி, எஸ் ரெய்னா, ஏ ராயுடு, எம்.எஸ் தோனி, ஆர் ஜடேஜா, எஸ் குர்ரான், எஸ் தாகூர், டி சஹார், எல் என்ஜிடி ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக கியூ டி கோக், ஆர் ஷர்மா, எஸ் யாதவ், கே பாண்ட்யா, கே பொல்லார்ட், எச் பாண்ட்யா, ஜே நீஷம், ஆர் சாஹர், டி குல்கர்னி, ஜே பும்ரா, டி போல்ட் ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர். 

டாஸை வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது. இன்று ஐ.பி.எல் 2021 கோப்பை தொடரில் மும்பை - சென்னை அணிகள் முதன் முதலாக மோத இருப்பதால், ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 Match CSK Vs MI 1 May 2021 MI Won Toss Choose Bowl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->