#BREAKING: வச்சு செஞ்சுட்டானுங்க குமாரு! கடைசி 3 ஓவரில் கதற கதற நடந்த சம்பவம்! யாருக்கா? மேட்ச் பார்த்த எங்களுக்கு தாண்டா?! - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் ஆடி வருகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் 20 ரன்களுக்கும், மற்றோரு தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 48 ரன்கள் சேர்த்த போது ஆட்டமிழந்தார்.

தமிழக வீரர் ஆன வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளை சந்தித்து பதிமூன்று ரன்களை மட்டுமே எடுத்து முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 2 சிக்ஸர்களை விளாசி 29 ரன்களை தனது பங்குக்கு சேர்த்துவிட்டு அவரும் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடக்கூடிய ஏபி டிவில்லியர்ஸ் 5 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய மோரிஸ் தான் சந்தித்த 8 பந்துகளில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரிகயையும் விளாசி 25 ரன்கள் குவித்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தற்போது ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்  அகர்வால் 2 சிக்கசர்களையும், 3 பவுண்டிகளையும் விளாசி 45 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். மற்றும் ஒரு ஆட்டக்காரரும் அணியும் கேபட்டனுமான கே எல் ராகுல் இன்று வெற்றி ஒன்றே இலக்கு என்ற நோக்கில் பெங்களூர் அணியின் பந்து வீச்சை நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடினார். கே எல் ராகுல்  61 ரன்களும், கிறிஸ் கெயில்  53  ரன்களும்  எடுத்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்கள், இரண்டு அணியின் வீரர்களுக்கும், வேடிக்கை பார்த்த ரசிகர்களுக்கும் சிறப்பான சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு ரன் எடுத்தால் பஞ்சாப் அணி வெற்றி என்ற நிலையில் களமிறமாகிய பூரான் சிக்ஸர் அடித்து ஒரு வழியாக ஆட்டத்தை முடித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 RCB VS PUNJAP RESULT


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->