நேற்றைய போட்டியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் நம்பிக்கையை பெற்ற அணி! இதோ அந்த புள்ளி பட்டியல்!  - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் நேற்றைய 37 வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தியது. இதன் காரணமாக சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்னை சூப்பர் கிங்ûஸ தள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் ஆனார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது. மேலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் நம்பிக்கையை அந்த அணிக்கு இந்த வெற்றி அளித்துள்ளது.

அதே நேரத்தில் தோல்வியடைந்த சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்று உள்ளது. மேலும் போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

புள்ளிகள் பட்டியல்:-

வரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
1. தில்லி 9 7 2 14 +0.921
2. மும்பை 9 6 3 12 +1.201
3. பெங்களூர் 9 6 3 12 -0.096
4. கொல்கத்தா 9 5 4 10 -0.607
5. ராஜஸ்தான் 10 4 6 8 -0.591
6. ஹைதராபாத் 9 3 6 6 +0.008
7. பஞ்சாப் 9 3 6 6 -0.262
8. சென்னை 10 3 7 6 -0.463

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 point table oct 20


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->