உலகக்கோப்பையில் இதுவரை இந்த இரு அணிகளின் சுவாரசியமான தகவல்கள்! உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ஆவது லீக் ஆட்டம் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது.

இந்த ஆட்டம் ரோஸ் பவுல் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

 உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் இதுவரை ஒரு உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த  போட்டியில் வங்கதேசம்  வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் அணிக்கு எதிராக இதுவரை வெற்றி பெறவே இல்லை. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது ஆப்கானிஸ்தான் அடித்த அதிகபட்ச ரன்கள் 162, வங்கதேசம் அடித்த அதிகபட்ச ரன்கள் 267. அதே போல, 267 ரன்கள் தான் வங்கதேசம் அடித்த குறைந்தபட்ச ரன்கள், 162 ரன்கள் ஆப்கானிஸ்தான் அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.

இந்த உலக கோப்பைபோட்டியில்  வங்கதேச அணி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளைப பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அனால்  இந்தியாவுடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு சிறந்த நெருக்கடியை இந்தியாவிற்கு கொடுத்தது. இதுபோல் வங்கதேச அணி இடமும் சிறந்த ஒரு விளையாட்டை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் இரு அணிகளும்  ஒரு சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் 
செய்து வருகிறது இரு அணிகள் இடையே நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interesting information from these two teams so far in the World Cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->